226
விஜய்யுடன் ‘பைரவா’, ரஜினியுடன் ‘கபாலி’ மற்றும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மைம் கோபியை நடிகர் விஜய், ஒரு சமயத்தில் நெகிழ வைத்திருக்கிறார். வில்லன், குணச்சித்திரம், சிறப்புத் தோற்றம் என்று பல படங்களில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் மைம் கோபி.
‘நான் ‘பைரவா’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த கோபி, என் தம்பி விஜய்யிடம் பேசியது என்னை நெகிழ வைத்தது என்றார். பின்னர் நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் வீட்டுற்கு அருகே, என் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது என்னை ஒரு கார் கடந்து சென்றது. சிறிது தூரம் சென்ற காரில் இருந்து ஒருவர் இறங்கி வந்து, சார் உங்களை கூப்பிட்டார் என்று சொன்னார். நான் போய் பார்த்தால் விஜய் உள்ளே இருந்தார்.
என்ன நண்பா இங்கு ஷூட்டிங்கா என்று கேட்டார். நான் தாடி எல்லாம் எடுத்து வித்தியாசமாக இருந்தேன். ஆனால், விஜய் என்னை அடையாளம் கண்டுக்கொண்டு தன்னிடம் பேசி விட்டு சென்றதாகவும் மைம் கோபி கூறினார்.
இதேவேளை ரஜினியின் நடிப்புக்கு தான் அடிமை எனக்கூறிய கோபி அவரை எப்போது பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்த சமயத்தில் பா.இரஞ்சித் மூலமாக கபாலி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் குறிப்பிட்டார்.
ரஜினி மின்னல் போன்றவர். இவருடைய சுறுசுறுப்பு யாருக்கும் இருக்காது. அவர் நடிக்கும் முதல் காட்சியை நேரில் பார்க்கும் போது அசந்து போனேன். 10 சிங்கத்திற்கு சம்மானவர். என்னுடைய நடிப்பையும் மிகவும் புகழ்ந்தார் என்றும் மைம் கோபி மேலும் குறிப்பிட்டார்.
Spread the love