182
தாண்டவம், தலைவா என பல திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிய ஜி.வி.பிரகாஷ் பல வெற்றிப் பாடல்களை வழங்கியுள்ளார். தற்போது புதிய படம் ஒன்றின் மூலம் மீண்டும் இருவரும் இணைய உள்ளனர். விஜய் இயக்கும் இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கின்றார்.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், சமீபத்தில் வெளியான படம் ‘நாச்சியார்’. பாலா இயக்கிய இப்படத்தில் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தற்போது இவரது நடிப்பில் ‘அடங்காதே, 4ஜி, செம, குப்பத்து ராஜா, ஐங்கரன், சர்வம் தாள மயம், 100% காதல் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன.
இந்நிலையில், மற்றொரு புதிய படத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதனை பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, ஏ.எல்.விஜய் இயக்கிய 7 படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனக் கூறப்படுகின்றது.
Spread the love