266
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் தூய வெள்ளி திருவழிபாடுகள் நேற்று (30.03.2018) மாலை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் இடம் பெற்றது. பெருந்தொகையான மக்கள் மிகவும் பக்தி உணர்வுபூர்வமாக இவ் வழிபாட்டில் பங்கேற்றனர்.
இறைவார்த்தை வழிபாடு, திருச் சிலுவை ஆராதனை, நற்கருணை போன்ற முக்கிய திருவழிபாடுகளின் முடிவில், தூய வெள்ளி பக்தி முயற்சியான இயேசுவின் மரணத்தை மையப்படுத்திய ஆசந்தி திரு நிகழ்வும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love