குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொள்வதற்கு முன்னதாக இந்தியாவின் கேரள மாநில பிரஜைகள் கொழும்பில் தங்கியிருந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. 2016ம் ஆண்டு முதல் இதுவரையில் சுமார் 90 கேரள பிரஜைகள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக கேரள மாநில காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கொழும்பில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் வீடுகளில் தங்கியிருந்து யுத்த வலயங்களுக்கு சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளனர்
மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் இவ்வாறு கேரள பிரஜைகள் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல் மருத்துவர்கள், மருத்துவர்கள், தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்ட பலர் இவ்வாறு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது