குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெசாக் தோரணங்கள், பந்தல்கள் மற்றும் தன்சல்களுக்கு தடை விதிக்கப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெசாக் மற்றும் பொசோன் பௌர்ணமி தினங்களில் இலங்கையில் வழமையாக காட்சிப்படுத்தப்படும் தோரணங்கள், பந்தல்கள் மற்றும் உணவு விநியோகம் என்பன தடை செய்யப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பௌத்த மத வழிபாட்டு கலாச்சாரங்களை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் உரிய முறையில் அனுமதி பெற்றுக்கொண்டதன் பின்னர் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசாங்கம் வெசாக் தோரணங்கள் பந்தல்களுக்கு தடை விதித்துள்ளதாகவும் இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.