குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மியாமி ஓபன் மகளிருக்கான டென்னிஸ் இறுதிப் போட்டியில் அமெரிக்க ஓபன் சம்பியன் பட்டம் வென்ற ஸ்லோன் ஸ்டெபன்ஸூம், பிரெஞ்சு ஓபன் சம்பியன் பட்டம் வென்ற ஜெலினா ஒஸ்டபென்கோவும் மோதிக்கொள்ள உள்ளனர். பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த அஸாரென்காவை 3-6 6-2 6-1. என்ற செற் கணக்கில் வீழ்த்தி ஸ்டெபன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.
அமெரிக்க வீராங்கனை டெனிலி கொலின்ஸை 7-6 (7-1) 6-3 என்ற செற் கணக்கில் வீழ்த்தி லட்வியாவைச் செர்ந்த ஜெலினா ஒஸ்டபென்கோ வெற்றியீட்டியுள்ளார். நாளைய தினம் மியாமி ஓபன் இறுதிப் போட்டியில் ஒஸ்டபென்கோவிற்கும், ஸடெபென்ஸிற்கும் இடையில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது