குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரிய விவகாரத்தில் பிரான்ஸின் தலையீடு அவசியமற்றது என துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். வட சிரியா விவகாரத்தில் தலையீடு செய்ய விரும்புவதாக பிரான்ஸ் அறிவித்திருந்த நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரான்ஸின் நிலைப்பாடு கவலையளிப்பதாகவும் அதன் தலையீடு அவசியமில்லை எனவும் துருக்கி ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
குர்திஸ் கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு பிரான்ஸ் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத அமைப்பு ஒன்றுடன் பேச்சுவார்த்தை மேசையில் அமர்வதற்கு தயாரில்லை எனவும், தொடர்ந்தும் போராடத் தயார் எனவும் துருக்கி; ஜனாதிபதி தெரிவித்துள்ளார். துருக்கி அரசாங்கம் குர்திஸ் கிளர்ச்சியாளர்களுடன் போரிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.