குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உளவாளிகள் மீது இரசாயன தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தி ரஸ்ய ராஜதந்திரிகள் நாடு கடத்தப்பட்டு வரும் நிலையில், ரஸ்யாவும் தற்பொழுது வெளிநாட்டு ராஜதந்திரிகளை நாடு கடத்த ஆரம்பித்துள்ளது. முதல் கட்டமாக பிரித்தானிய ராஜதந்திரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு ரஸ்யா உத்தரவிட்டுள்ளது. பிரித்தானியாவில் முன்னாள் உளவாளி மற்றும் அவரது மகள் மீது இரசாயன தாக்குதல் நடத்தியதாக ரஸ்யா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை என ரஸ்யா திட்டவட்டமாக மறுத்து வருகின்றது.
இந்த நிலையில் மேற்குலக நாடுகளிலிருந்து சுமார் 150 ரஸ்யர்கள் நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது, ரஸ்யாவும் , தமது நாட்டு பிரஜைகள் மற்றும் ராஜதந்திரிகளை நாடு கடத்தும் நாடுகளின் பிரஜைகள் மற்றும் ராஜதந்திரிகளை நாடு கடத்தும் யுக்தியொன்றை பின்பற்றத் தொடங்கியுள்ளது.
ஒரு நாட்டில் ரஸ்ய ராஜதந்திரிகள் எத்தனை பேர் தங்கியிருக்க முடியுமோ குறித்த நாட்டின் அதேயளவு ராஜதந்திரிகளே ரஸ்யாவில் தங்கியிருக்க முடியும் என்ற நிலைப்பாட்டை ரஸ்யா கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது