152
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதா இல்லையா என்பது குறித்து நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி இந்த தீர்மானத்தை எடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 16 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love