குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடையும் என கொழும்பு ஊடகமொன்று ஊகம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 4ம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றில் விவாத்தி;ற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்வாறான தீர்மானம் எடுத்தாலும் அது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாதிக்காது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதாவது நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு சுதந்திரக் கட்சி தீர்மானம் செய்தாலும், சில உறுப்பினர்கள் எதிராக வாக்களிப்பார்கள் அல்லது வாக்களிப்பில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய முன்னணி நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிப்பது என ஏற்கனவே முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்தால் சுதந்திரக் கட்சியில் பிளவு ஏற்படுவதனை தடுக்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்கவும் சுதந்திரக் கட்சியின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் ஆயத்;தமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் வெற்றியீட்டுவார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.