குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நடத்தப்பட்ட பேரணியில் பங்கேற்றவர்களிடமிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியினால் இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது. கட்சியின் தலைவர் மைத்திரி குணரட்ன உள்ளிட்டவர்கள் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்திருந்தனர்.
இதன்போது கடுகன்னாவ பிரதேசத்தில் வைத்து மைத்திரி குணரட்ன உள்ளிட்டவர்களின் பேரணியில் சென்ற வாகமொன்றிலிருந்து குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. துப்பாக்கிகள் மற்றும் பொல்லுகள் உள்ளிட்டன மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் மைத்திரி குணரட்னவை கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து துப்பாக்கி;களுக்கான அனுமதிப்பத்திரங்களை சமர்பித்ததன் பின்னர் மைத்திரி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிரதமர் பதவி விலக வேண்டுமெனக் கோரியே இவ்வாறு பேரணி முன்னெடுக்க்பபடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.