குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிக்க 6 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களே பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளனர்.
அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையிலான தேசிய தொழிலாளர் முன்னணி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளனர்.
இதனிடையே நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் பின்னர் தான் அமைச்சர் பதவியில் இருந்து விலக போவதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சில அமைச்சர்கள் தம்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதே இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.