வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள உதைப்பந்தாட்ட கழகங்களை உள்ளடக்கி ‘வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் சுற்றுப்போட்டி -2018’ (N.E.L.P)எனும் பெயரில் இடம் பெறவுள்ள மாபெரும் உதைப்பந்தாட்ட போட்டியில் கலந்து கொள்ளவுள்ள மன்னார் மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் இரு அணிகளின் வீரர்கள் அறிமுகம் மற்றும் அவர்களுக்கான பயிற்சி சீருடைகள் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (31) மாலை 5 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் செயலாளர் ப.ஞானராஜ் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் இலங்கை உதை பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் ஞானப்பிரகாசம் டேவிட்சன்(ஜெறாட்) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் முக்கியஸ்தர்கள் மற்றும் இரு அணிகளின் பங்குதாரர்கள் 7 பேர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது வீரர்களின் அறிமுகம இடம் பெற்றதோடு,குறித்த வீரர்கள் கௌரவிக்கப்பட்டு பயிற்சி சீருடைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.