குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம் நடைபெறும் நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை ஒன்று இன்று நடைபெறவுள்ளதுடன் வாகனங்களை நிறுத்தும் இடம் குறித்து இதன் போது இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்ற பார்வையாளர் கலரியில் உள்ள ஆசனங்களை குறைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது.
நாடாளுமன்றத்தில் பொது பார்வையாளர் கலரியில் 691 ஆசனங்கள் உள்ளன. அதில் 96 ஆசனங்கள் விசேட நபர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 60 ஆசனங்கள் ஊடகவியலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது வாக்குகள் சமமாக அளிக்கப்பட்டால் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் சபாநாயகர் அல்லது அப்போது சபைக்கு தலைமை தாங்கும் நபருக்கு கிடைக்கும் என தகவல்கள் கூறுகின்றன.