160
வீட்டில் தனித்திருந்த தாயும், மகளும் அடிகாயங்களுடன் இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டனர். படுகாயமடைந்த மகள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். தாயார் காயங்களுடன் பருத்தித்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பருத்தித்துறை அம்பன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மகளுக்கு 58 வயது எனக் கூறப்படுகிறது. இது கொலையாக இருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும் சம்பவத்துக்கான காரணம் வெளியாகவில்லை.
சம்பவ இடத்தில் காவற்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love