கிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா உழியர்கள் அடையாள உணவுதவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மாதாந்த நிலுவைக் கொடுபனவு உட்பட ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிழக்குப் பல்கைலக் கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 34 நாட்களாக பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட போதிலும் உயர்கல்வி அமைச்சோ, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத நிலையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.