இலகுவான அடிப்படையில் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிகொள்ளப்படும் – ஐ.தே.க..
மிகவும் இலகுவான அடிப்படையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிகொள்ளப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
2020ம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலுக்கான முனைப்புக்களை ஆரம்பிக்க உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சில பாரர்ளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பாளர்கள் என குறிப்பிட்டுள்ள அவர், எதிர்வரும் நாட்களில் இன்னும பல அதிர்ச்சிகள் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்..
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நாளை மறுதினம் நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த கலந்துரையாடலுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்க உள்ளார்.