Home இலங்கை யாழ் போதனா வைத்தியசாலை முக தாடை வாய் சத்திரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சை

யாழ் போதனா வைத்தியசாலை முக தாடை வாய் சத்திரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சை

by admin

 யாழ் போதனா வைத்தியசாலையில் இயங்கிவரும் முக தாடை வாய் சத்திரசிகிச்சைப் பிரிவானது (Oral & Maxillo Facial Unit – OMF unit) முக தாடை சம்பந்தமான நோய்களையும் குறைபாடுகளையும் கண்டறிவதுடன் அதற்குரிய சிகிச்சைகளையும் மேற்கொண்டு வருகின்றது. இதனடிப்படையில் ,

1.   பிறப்பிலிருந்து வருகின்ற குறைபாடுகள் (Congenital Craniofacial Malformations)

2.        முக அமைப்பு சீராக்கல் – தாடை அமைப்பு , காது அமைப்பு, நெற்றியின் அமைப்பு

3.        கட்டிகள், புற்றுநோய் கட்டிகள் அகற்றல்.

4.        விபத்துக்களால் ஏற்படுகின்ற முக தாடை என்பு உடைவுகளை சீரமைப்புச் செய்தல் ( Post  Traumatic Facial Reconstructions)

5.      பாரிசவாத நோயால் முகத்தசைகளில் ஏற்படுகின்ற குறைபாடுகளை சீராக்கல் (Facial Re- Animation)

போன்ற பல சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு சேவையாக முக தாடை சத்திரசிகிச்சை நிபுணத்துவக் குழாம் பல பாகங்களிலிருந்தும் யாழ்ப்பாணம் வருகை தந்து ஏப்பிரல் மாத பிற்பகுதியில் மேலதிக சிகிச்சைகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

 இதில் பயன்பெற விரும்புவோர் யாழ் போதனா வைத்தியசாலை முக தாடை வாய் சத்திரசிகிச்சைப் பிரிவில்  (OMF Unit) கிழமை நாள்;களில்  நேரடியாகவும் மற்றும் 0779938324 எனும் தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களைப்  பெற்றுக்  கொள்ள முடியும்.

 பணிப்பாளர்

போதனாவைத்தியவாலை

யாழ்ப்பாணம்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More