ஈராக்கில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் உடல்கள் நேற்றையதினம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ்சுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
கடந்த 2014-ம் ஆண்டு ஈராக்கின் மொசூல் நகரில் 39 இந்தியர்கள் உட்பட 40 பேரை ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்தியநிலையில் ஒருவர் மட்டும் தப்பிய நிலையில் ஏனைய 39 இந்தியர்களும் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்தியாவின் கோhரிக்கைக்கமைய ஈராக் அதிகாரிகள் இந்தியர்களின் உடல்களை கண்டுபிடித்து மீட்டுள்ளனர். அந்த உடல்களை இந்தியா கொண்டுவர இந்திய மத்திய வெளியுறவு இணை அமைச்சர் வி.கே.சிங் ஈராக் சென்றிருந்தார். அந்தவகையில் விமானம் மூலம் 38 இந்தியர்களின் உடல்கள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகருக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டுள்ளன. பீகாரைச் சேர்ந்த ஒருவரின் உடலை அடையாளம் காண முடியாதநிலையில் ஏனையவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.