பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமானது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்திற்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஆரம்பமானது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 09 உறுப்பினர்கள் பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி மஹிந்த சமரசிங்க, பியசேன கமகே, துமிந்த திஸாநாயக்க, மானுஷ நாணயக்கார, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஃபைசர் முஸ்தபா மற்றும் சரத் அமுனுகம ஆகியோர் பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க குழுவில் உள்ளனர். இதேவேளை சுதந்திர கட்சியின் மேலும் சில உறுப்பினர்கள் கட்சி மாறுவதற்கு தயாராக இருப்பதாகவும் அறியக் கிடைத்துள்ளது.
எவ்வாறாயினும் இந்த விவாதம் இரவு 9.30 வரை நடைபெறவுள்ளதுடன், 9.30 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மாதம் 21 ஆம் திகதி பிரதமருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தனர்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி பங்குபற்றாது?
தலைமை அமைச்சர் ரணில் விக்ரம சிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி பங்குபற்றாது என்று அமைச்சர் எ.எச்.எம். பௌசி சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.
ரணில் விக்ரம சிங்கவுக்கு எதிராக மகிந்த அணியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த விவாதம் இரவு 9.30 வரை நடைபெறவுள்ளது. 9.30 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறும். பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் – சந்திம வீரக்கொடி
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பதா அல்லது இல்லையா என்பது குறித்து இன்றைய தினம் அறிவிக்கப்படும் என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பொதுவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டுமென ஜனாதிபதி கோரியதாகத் தெரிவித்துள்ளார். சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்றிரவு விசேட சந்திப்பு நடத்தப்பட்டிருந்தது.
கட்சி ரீதியான தீர்மானங்களை எடுக்குமாறு அவர் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.