குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வீட்டுக்கு அனுப்பவே முயற்சிக்கப்படுவதாக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் காலத்தில் ‘ரணிலுக்கு முடியாது’ என சுவரொட்டிப் பிரச்சாரம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பிரதமர் இலக்கு வைக்கப்படவில்லை எனவும், ஜனாதிபதியே இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றை கொண்டு வந்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைக்க முயற்சிக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்