குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் நோக்கிலானது என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் இன்றைய தினம் பாராளுமன்றில் நடைபெற்று வருகின்ற நிலையில் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் எவ்வித நம்பிக்கையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். யார் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வருகின்றார்கள் என்ன அரசியல் நோக்கம் பின்னணியில் உள்ளது என்பது தெளிவாக தென்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறெனினும், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாகவா அல்லது எதிராகவா வாக்களிக்கப்படும் என்பது குறித்து சம்பந்தன் தனது உரையில் எதனையும் குறிப்பிடவில்லை.