குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்க முடியாது என அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான பாராளுமன்ற விவாத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தை விடவும் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு பாரியளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். படைவீரர்களை சிறையில் அடைக்கும் நிலைமை உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பில் சவால் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை உருவாக்குவதற்கு முன்னணயில் நின்று செயற்பட்ட தமக்கே இதனைக் கூறுவதற்கு கவலையாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். நாடு மிகுந்த ஸ்திரமற்ற நிலையில் காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.