138
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
நம்பிக்கையில்லா தீர்மானம் ஒர் சூழ்ச்சித் திட்டமாகும் என அமைச்ச சம்பிக்க ரணவக்கத் தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஓர் அரசியல் குண்டாகவே கருதப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இந்த அரசியல் குண்டு பாராளுமன்றில் தோற்கடிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதரை தோற்கடிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடிகளுக்கு நிகரான மோசடிகளை செய்த நபர்கள் வெளியில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love