குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியினால் இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் போது திலங்க சுமதிபால நடந்துகொண்ட விதம் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் பிரதி சபாநாயகர் பக்கச்சார்பற்ற முறையில் நடந்து கொண்டிருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளின் போது சுமதிபாலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.