நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை எதிர்வரும் 9 ஆம் திகதி பதவியேற்கும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்களில் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த எவரும் தொடர்ந்தும் ஆளும் கட்சியில் இணைந்து செயற்பட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த மற்றும் அது தொடர்பான யோசனையில் கையெழுத்திட்டவர்கள் அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருக்க அவர்களுக்கு தார்மீக உரிமையில்லை. எதிர்வரும் திங்கட்கிழமை தூய்மையான அரசாங்கம் உருவாக்கப்படும். அமைச்சரவையில் மாற்றம் இல்லை புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளும்.
மேலும் பிரதி சபாநாயகர் பதவியிலும் மாற்றம் ஏற்படுத்தப்படும். அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தவர்களுக்கு தொடர்ந்தும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க முடியாது. விலக்கும் முன்னர் அவர்கள் விலகி விட வேண்டும். நம்பிக்கையில்லாப் பிரேரரணையே எமது திருப்புமுனை எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.