அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2ஆம் இணைப்பு- மான் வேட்டை – சிறை செல்கிறார் சல்மான்கான் – குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு…
Apr 5, 2018 @ 06:12
அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் பொலிவுட் நடிகர் சல்மான்கான் குற்றவாளி என ஜோத்பூர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. குற்றம்சாட்டப்பட் மற்ற அனைவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தீர்ப்பு வெளியாவதையொட்டி சல்மான் கான் தனது பாதுகாவலருடன் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தார். அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.
சல்மான்கான் மீதான கடைசி மான்வேட்டை வழக்கு இதுவாகும். கடந்த ஆண்டு ஆயுத சட்ட வழக்கில் அவரை ஜோத்பூர் நீதிமன்றம் விடுவித்து இருந்தது. மேலும் சின்கரா மான்வேட்டை வழக்கிலும் விடுவிக்கப்பட்டு இருந்தார்.
சல்மான்கான் உள்ளிட்டவர்கள் தப்புவார்களா, தண்டிக்கப்படுவார்களா?
20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சல்மான்கான் மீதான மான்வேட்டை வழக்கு தொடர்பில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. 1998-ம் ஆண்டு பிரபல இந்தி நடடிகரான சல்மான்கான் குழுவினர் படபிடிப்பொன்றில் ஈடுபட்டிருந்த போது காரை ஓட்டிச்சென்ற சல்மான்கான், அங்கு அபூர்வமான கறுப்பு மான்கள் இரண்டை சுட்டு வேட்டையாடியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
இவர்கள் மீதான வழக்கு, ஜோத்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளான நடைபெற்றுவந்தநிலையில் இன்று மாஜிஸ்திரேட்டு தேவ் குமார் காத்ரி தனது தீர்ப்பை வழங்க உள்ளார். ஆதன்போது நடிகர் சல்மான்கான் உள்ளிட்டவர்கள் தப்புவார்களா, தண்டிக்கப்படுவார்களா என்பது குறித்து தெரியவரும். நீதிமன்றில் முன்னிலையாவதற்காக சல்மான்கான் நேற்றையதினம் தனி விமானத்தில் மும்பையில் இருந்து ஜோத்பூர் சென்றுள்ளார்.