180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சாவகச்சேரி பிரதேச சபையையும் தமிழ்தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது. குறித்த சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர்களை தெரிவு செய்வதற்கான முதலாவது அமர்வு வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மரியதாஸ் பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன் போது புதிய தவிசாளராகக் கட்சி சார்பில் போட்டியிட்ட கந்தையா வாமதேவன் 23 வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னனியைச் சேர்ந்த கந்தையா சதீஸ்வரன் 6 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்
Spread the love