ராணுவம், உள்துறை, சுகாதாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சகங்களின் இணையதளங்கள் முடக்கப்படவில்லை எனவும் அது தொழில்நுட்ப கோளாறு மட்டுமே எனவும் இந்திய தேசிய தகவலியல் மையம் தெரிவித்துள்ளது
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளம் இன்று பிற்பகலில் திடீரென முடக்கப்பட்டு சீன, ஆங்கிலம் மற்றும் இந்தியில் பாதுகாப்பு அமைச்சகம் என்ற எழுத்துக்கள் மட்டும்; பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சக வரலாறு, முப்படைகளை பற்றிய தகவல்கள், விரைலமனுக்கோரல் விண்ணப்பங்கள் என பாதுகாப்பு துறை தொடர்புடைய அனைத்து தகவகளும் இந்த இணைத்தளத்தில் இடம்பெற்றிருக்கும்.
சீன மொழி இணையதளத்தில் பொறிக்கப்பட்டுள்ளதால் சீனாவில் இருந்து இந்த செயல் மேற்கொள்ளப்படடடிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இணையதளத்தை மீட்கும் பணியில் தொழில்நுட்ப பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், இது தொடர்பாக எந்த பதிலையும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது