குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றியை கொண்டாடும் வகையில் இராணுவ அணி வகுப்பை நடத்த போவதில்லை எனவும் வெற்றி பெற்ற தினத்தை நினைவுகூரும் தினமாக பெயரிட்டுள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து தெரிவித்துள்ளது. அத்துடன் இரா. சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க நடவடிக்கை எடுத்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. எனச சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியில், இலங்கை அரசாங்கம் இப்படியான அறிக்கையை முதன் முதலில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் சமர்பித்துள்ளது. சகவாழ்வு செயற்பாடுகளின் கீழ் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தலைப்பின் கீழ் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் அறிக்கை மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் தூதுவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.