258
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புலம்பெயர் தமிழ் சமூகத்தை திருப்திபடுத்தும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருவதாக ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பத்து நிபந்தனைகளை பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும்
இலங்கையை சமஸ்டி நாடாக மாற்றும் அரசியல் சாசனத்தை உருவாக்குவது குறித்த நிபந்தனையையும் பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டை பிளவுபடுத்தும் கோரிக்கையை கூட பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் பிரதமருக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
Spread the love