Home உலகம் இஸ்ரேல் படையினரின் தாக்குதலில் 8 பலஸ்தீனர்கள் பலி – 250க்கும் மேற்பட்டோர் காயம்

இஸ்ரேல் படையினரின் தாக்குதலில் 8 பலஸ்தீனர்கள் பலி – 250க்கும் மேற்பட்டோர் காயம்

by admin


இஸ்ரேல் எல்லையில் பலஸ்தீனர்கள் நடத்தியுள்ள போராட்டங்களின்போது, இஸ்ரேல் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் எட்டு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பலஸ்தீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

5 இடங்களில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் மீது கண்ணீர் புகை குண்டுகளை இஸ்ரேல் படையினர் வீசியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் இருக்கும் தங்களுடைய முன்னோரின் நிலங்களுக்கு திரும்பி வர அகதிகளையும், அவர்களின் வழித்தோன்றல்களையும் அனுமதிக்க வேண்டும் எனக் கோரி பலஸ்தீனர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் போதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை இஸ்ரேலின் முன்னணி பாதுகாப்பு அரண்களை அணுகியோர் மீதே துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. எல்லையை தாக்கி, இஸ்ரேல் மக்களை கொல்ல ஹமாஸ் தீவிரவாத குழு காசா மக்களை தூண்டிவிடுவதாக இஸ்ரேலின் செய்தி தொடர்பாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இதே போன்ற போராட்டங்களின் போது, இஸ்ரேல் ராணுவம் 16 பலஸ்தீனியர்களை சுட்டு கொன்றதோடு, ஆயிரத்திற்கு மேற்பட்டோரை காயப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

An injured Palestinian protestor is carried by fellow demonstrators during clashes with Israeli security forces following a demonstration calling for the right to return — meaning Palestinian refugees being allowed to go back to the land they fled or were expelled from during the 1948 war surrounding Israel’s creation — near the border with Israel, east of Khan Yunis, in the southern Gaza Strip, on April 6, 2018 Clashes erupted on the Gaza-Israel border a week after similar demonstrations led to violence in which Israeli force killed 19 Palestinians, the bloodiest day since a 2014 war. / AFP / SAID KHATIB

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More