இந்திய விமானப் படையின் போர்த் திறனை அதிகரிக்க கூடுதல் போர் விமானங்களை வாங்க விமானப் படை முடிவு செய்துள்ளது. வெளிநாட்டிலுள்ள விமானத் தயாரிப்பு நிறுவனத்துடன், இந்திய விமான நிறுவனம் இணைந்து போர் விமானங்களை உருவாக்கும் வகையில் 114 போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உலக அளவிலான விலைகோரலை விமானப் படை கோரியுள்ளது. போர் விமானங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாலும் சில விமானங்கள் பழையதாகி விட்டதாலும் புதிய விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பரில் 59,000 கோடி ரூபா செலவில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்திருந்த குறிப்பிடத்தக்கது.