இந்தியத் தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட புழுதிப்புயலால் சுமார் 29 விமானங்கள் மாற்று வழியில் திருப்பி அனுப்பப்பட்டன என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியின் அக்பர் சாலை, ராஜேந்திர பிரசாத் மார்க், ஆர்.கே புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று மாலை வானிலை திடீரென மாறத்தொடங்கியதுடன் எங்கும் கரும் இருள் சூழ்ந்தவாறு காற்றுடன் புழுதிப்புயல் வீசத்தொடங்கியது.
இந்நிலையில், டெல்லியில் நேற்று மாலை ஏற்பட்ட புழுதிப்புயலால் சுமார் 29 விமானங்கள் மாற்று வழியில் திருப்பி அனுப்பப்பட்டன என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, இந்திராகாந்தி சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், நேற்று மாலை 5.45 மணி முதல் இரவு 7.25 மணி வரை பல்வேறு விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இதில் காத்மாண்டுவில் இருந்து வந்த நேபாளம் ஏர்லைன்ஸ் உள்பட பல விமானங்கள் அடங்கும். மேலும், 12 விமானங்கள் அமிர்தசரசுக்கும், 8 விமானங்கள் லக்னோவுக்கும் திருப்பி விடப்பட்டன என தெரிவித்துள்ளனர்.