குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜெர்மனியின் முன்ஸ்டர் (muenster)) நகரில் மக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்த விபத்தில் முதல் கட்டமாக 4 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் முன்ஸ்டர் நகரில் நேற்று மாலை மக்கள் விடுமுறை தினத்தை குடும்பத்தினருடன் கழித்துக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அங்குள்ள சாலை ஒன்றை கடப்பதற்காக பொதுமக்கள் கூட்டமாக காதிருந்த போது கார் ஒன்றினால் அவர்கள் மீது மோதப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 4 பேர் பலியாகி உள்ளதுடன். மேலும், இதில் 30 பேர் காயம் அடைந்ததுள்ளனர். மக்கள் மீது வாகனத்தை மோதுண்ட சாரதி தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்துள்ளார். இந்த தாக்குதல் ஓர் தற்கொலைத் தாக்குதலா என்ற அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜெர்மனியின் மக்கள் கூட்டத்திற்குள் வாகனத்தினை செலுத்தி தாக்குதல் – பலர் உயிரிழந்திருக்கலாம்
Apr 7, 2018 @ 17:06
ஜெர்மனியின் முன்ஸ்டர் (muenster) நகரில் மக்கள் கூட்டத்திற்குள் வாகனத்தினை செலுத்தி மேற்கொண்ட தாக்குதலில் பலர் உயிரிழந்தருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலாளி தம்மைத் தாமே சுட்டுக் தற்கொலை செய்துகொண்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று கருதப்படும் இந்தச் சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்று என உள்ளூர் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 30 பேர் வரையில் இந்த விபத்தில் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் உறுதியான தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை