Home இந்தியா பொதுநலவாய நாடுகள் போட்டித் தொடரில் தமிழக வீரர் தங்கப் பதக்கம் வென்று சாதனை

பொதுநலவாய நாடுகள் போட்டித் தொடரில் தமிழக வீரர் தங்கப் பதக்கம் வென்று சாதனை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் நடைபெற்று வரும் பொதுநலவாய நாடுகள் போட்டியில் ஆண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் சதிஷ் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற ஆடவருக்கான பளுதூக்குதல் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். சதீஷ்குமார் சிவலிங்கம் தமிழகத்தின் வேலுர் மாவட்டம் சத்துவாச்சாரியைச்சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சதீஷ்குமார் சிவலிங்கம் கடந்த முறை ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் போட்டித் தொடரிலும்; தங்கம் வென்று இருந்தார். இதேவேளை, தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கத்திற்கு 50 லட்சம் ரூபா ஊக்கத் தொகை வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் போட்டித் தொடரின் பளுதூக்கும் போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற சதீஷிற்கு இவ்வாறு 50 லட்சம் ரூபா ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. சதிஷின் வெற்றி குறித்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் எடாப்படி பழனிச்சாமி இதனைத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More