குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இடி மின்னல் பற்றிய மர்மங்களை அறிந்து கொள்ளும் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இயற்கையின் அற்புதமான விடயங்களில் ஒன்றாக இடி மின்னல் உருவாவது கருதப்படுகின்றது. இடி மின்னலின் ஆரம்பத்தை மட்டுமே பூமியிலிருந்து எம்மால் பார்க்க முடிகின்றது, இந்தநிலையில் பூமிக்கு மேற்பரப்பில் உருவாகும் மாற்றங்கள் குறித்து ஆராயப்பட உள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தினால் இது குறித்த ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன. விண்வெளி ஆய்வு மையங்களில் இடி மின்னல் தொடர்பிலான பதிவுகள் அடிக்கடி கிடைக்கப்பெறுகின்றன. வானிலிருந்து உருவாகி வரும் இடி மின்னல்களைப் போன்றே, பூமியிலிருந்து வானை நோக்கியும் இடி மின்னல்கள் செல்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இடி மின்னல் தொடர்பில் காணப்படும் பல்வேறு மர்மங்களை கண்டறியும் நோக்கில் ஆய்வு நடத்தப்பட உள்ளது.