காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழ் திரையுலகினரின் அறவழிப்போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆரம்பமானது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் அறவழிப்போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று தொடங்கியது.
நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் நடிகர்கள் விஜய் , சூர்யா, சிவகார்திகேயன் கலந்து கொண்டுள்ளனர். நடிகர் சிவக்குமார் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் அஜித் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.