சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் குறித்து கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தேசிய சிறுவர் அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம், 582 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும், குறிப்பாக கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துதுறை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான முறைப்பாடுகள் கிடைமக்கப் பெற்றுள்ளதாகவும் அதிகார சபையின் தலைவர் மரினி டி லிவேரா தெரிவித்துள்ளார்.
காவல் நிலையங்களில், சிறுவர் அபிவிருத்தி அதிகார சபையின் ஒத்துழைப்புடன் விசேட பிரிவொன்றை ஸ்தாபித்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். துஷ்பிரயோக சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக திணைக்களம் உறுதியளித்துள்ளதாகவும் தேசிய சிறுவர் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மரினி டி லிவேரா மேலும் தெரிவித்துளளார்.