228
கிழக்கு மாகாணத்திலுள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கம் இன்று (08) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை கிண்ணியாவில் சந்தித்து கோரிக்கை முன்வைத்தது.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவை உடனே தொடர்புகொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், உண்மை நிலவரங்களை கேட்டறிந்துகொண்டார். இன்னும் சில வாரங்களில் தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஆளுநர் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.
Spread the love