குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் பூஜை நடத்த தயாராகிய போது கோயிலுக்குள் வந்த பெரிய நாகம் ஒன்று பூஜைக்காக பாணையில் வைத்திருந்த பாலை அருந்தியுள்ளதாக தெரியவருகிறது. பெரிய நாக பாம்பு கோயிலில் பூஜைக்கு தயார் செய்யப்பட்ட இடத்திற்குள் வந்ததால்இ அங்கு கூடியிருந்த மக்கள் அஞ்சத்தில் சிதறி ஒடியுள்ளனர்.
நடக்கும் சம்பவங்களை ஆலய குருக்கள் உட்பட சிலர் தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தனர். பாலை அருந்திய நாகம்இ பாணைக்குள் புகுந்துள்ளது. சுமார் 30 நிமிடங்கள் பாணைக்குள் இருந்த நாகம் பின்னர் அங்கிருந்து வெளியேறி காட்டுக்குள் சென்றுள்ளது. பூஜைக்கு வைத்திருந்த பாலை நாகம் அருந்தியதன் காரணமாக புதிதாக பாலை வரவழைத்து குருக்கள் பூஜைகளை நடத்தியுள்ளனர்.