குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை அந்த பதவிகளில் இருந்து நீக்குமாறு, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதியுடன் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில், கலந்துக்கொள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் முயற்சித்துள்ளதாகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் எதிர்ப்பை வெளியிட்டதன் காரணமாக அவர்கள் அங்கிருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.