குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சிக்கு நிரந்தர தலைவர் இருக்க முடியாது என்ற அடிப்படை இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் கட்சியின் தலைவராக இருப்பவர் விலக வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புதிய தலைவர், பிரதான அதிகாரிகளை நியமிக்க ஜனநாயக ரீதியிலான சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என்ற இணக்கப்பாட்டுக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு வந்துள்ளது.
கட்சிக்கு புதிய அரசியல் வியூகத்தை ஏற்படுத்தும் வகையில் அரசியல் சபை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக 12 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கட்சியில் பதவிகளில் வெற்றிடங்கள் ஏற்படும் போது, இந்த உறுப்பினர்கள் அதற்கு பொருத்தமானவரை தெரிவு செய்வார்கள் எனவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.