151
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களுடன் இணைந்து செயற்பட முடியவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இது பற்றி அறிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் சில அமைச்சர்களுடன் இணைந்து செயற்படுவதில் சிரமம் நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில்விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சில சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love