178
தெல்லிப்பளையில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் புதிதாக அமைக்கப்பட்ட 30 வீடுகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறித்த வீடுகளை திறந்துவைத்து பயனாளிகளிடம் கையளித்துள்ளார்.
குறித்த வீடுகள் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்பட்ட நிர்மாணப்பணிகளுக்கான வசதிகளுடன் படைத் தலைமையகத்தின் பொறியியளாலர்களின் பங்களிப்புடன் ஐந்து மாதங்களில் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love