தகவல்கள் திருட்டு தொடர்பாக முகப்புத்தக நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கிடம் நாளையும் நாளை மறுதினமும் அமெரிக்க பாராளுமன்றக்குழுவினர் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது டிரம்பின் தேர்தல் பிரசாரத்துக்காக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா தேர்தல் பகுப்பாய் நிறுவனத்துக்காக முகப்புத்தகத்தில் இருந்து தனிப்பட்டவர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்ட மார்க் ஜூக்கர்பெர்க் சுமார் 8.70 கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக தெரிவித்து அதற்காக மன்னிப்பும் கோரியிருந்தார்.
இந்த தகவல்கள் திருட்டு தொடர்பிலேயே மார்க் ஜூக்கர்பெர்க்கிடம் அமெரிக்க பாராளுமன்றக்குழுவினர் விசாரணை நடத்த உள்ள நிலையில் அவர் இதற்காக நாளை செவ்வாய்க்கிழமை செனட் பிரதிநிதிகள் முன்பும், நாளை மறுதினம் புதன்கிழமை பிரதிநிதிகள் சபை முன்பும் முன்னராகவுள்ளார்.