குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பை சரியாக நிறைவேற்றுவதில்லை என்பதால், எதிர்க்கட்சியின் உண்மையான தலைவரை ஏற்றுக்கொண்டு, கூட்டு எதிர்க்கட்சி பரிந்துரைக்கும் நபருக்கு கட்டாயம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துக்கொண்டு அரசாங்கத்தை பாதுகாக்கும் அணியாக இருப்பது நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான நடவடிக்கைகளில் புலப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் எதிர்க்கட்சியின் சார்பில் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நபர் அல்ல. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் கூட்டு எதிர்க்கட்சி பலமாக இருப்பதாகவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.