குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சுpரியாவின் டுமாவில் இரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடையாது என ரஸ்யா தெரிவித்துள்ளது. சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் காணப்படும் டுமா நகரில் இரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில் 48 மணித்தியாலங்களுக்குள் கடுமையான தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் என ஜனாதிபதி ட்ராம்ப் தெரிவித்துள்ளார். எனினும் டுமாவில் இரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடையாது என ரஸ்யா தெரிவித்துள்ளது. தாக்குதல் சம்பவத்தில் குறைந்தபட்சம் 70 பேர் வரையில் கொல்லப்பட்ருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.