196
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் இலங்கையில் வாகன விபத்துக்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டிலும் ஏப்ரல் மாதம் 10ம் திகதி தொடக்கம் 20ம் திகதி வரையிலான காலப் பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் அதிககளவில் பதிவாகின்றன. ஏப்ரல் புத்தாண்டு காலப் பகுதியில் 130 பேர் சராசரியாக உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. வாகனங்களில் பயணிப்பது தொடர்பில் மக்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
Spread the love