குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் லத்தின் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தினை ரத்து செய்துள்ளார். சிரியாவில் இடம்பெற்று வரும் இரசாயன ஆயுத தாக்குதல்கள் காரணமாக இவ்வாறு பயணத்தினை ரத்து செய்துள்ளார். இந்த விடயங்கள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற காரணத்தினால் இவ்வாறு லத்தீன் அமெரிக்க பயணத்தினை ட்ராம்ப் ரத்து செய்துள்ளார்.
சிரிய விவகாரம் தொடர்பில் கண்காணிக்கும் நோக்கில் தாம் வொஷிங்டனிலேயே தங்கியிருக்கப் போவதாக ட்ராம்ப் தெரிவித்துள்ளார். சிரியாவில் இரசாயன ஆயுத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இரசாயன தாக்குதல்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னதாக ட்ராம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.